ஆடிட்டர்கள் சொல்லித்தராத ரகசியம்: சும்மா தூங்கும் பணத்தை 'லட்சங்களாக' மாற்றுவது எப்படி?

மார்ச் மாசம் வந்தாச்சு. எப்படியும் ஆடிட்டர்கிட்ட உக்காந்து கணக்கு வழக்கெல்லாம் முடிச்சு பரபரப்பா இருப்பீங்க. இந்த வருஷம் உங்க கம்பெனியோட பேலன்ஸ் ஷீட்ட எடுத்துப் பாருங்க… பிசினஸ் டர்ன்-ஓவர் பல கோடிய தொட்டிருக்கும், லாபமும் நல்லா வந்திருக்கும். ஆனா, ஒரு நிமிஷம் அப்படியே உங்க பர்சனல் பேங்க் அக்கவுண்ட்ட ஓபன் பண்ணிப் பாருங்க. இவ்ளோ வருஷம் ராப்பகலா உழைச்சு, உங்க குடும்பத்துக்காக தனியா என்ன சொத்து சேர்த்திருக்கீங்க?

நிறைய பிசினஸ் ஓனர்கள் சொல்ற ஒரே பதில்: “வர்ற லாபத்தையெல்லாம் திரும்பத் திரும்ப Working Capital-ல தாங்க போடுறேன். எனக்கெதுக்கு தனியா காசு?”

இது எவ்ளோ பெரிய தப்பு தெரியுமா?

நம்ம ஆட்கள் பண்ற பெரிய தப்பே, கடையில இருக்குற கல்லாப் பெட்டியும், வீட்ல இருக்குற பீரோவும் ஒண்ணுனு நினைக்கிறதுதான். கம்பெனி வளரும், நல்ல பேரு கிடைக்கும், ஆனா கையில மட்டும் காசே நிக்கமாட்டேங்குதுனு உள்ளுக்குள்ள ஒரு வலி இருக்குமே, அது ஒவ்வொரு பிசினஸ் ஓனருக்கும் நல்லாவே தெரியும். நாளைக்கே எதிர்பாராத விதமா உங்க தொழில்ல ஒரு சறுக்கல் வந்தா, உங்க குடும்பத்தோட நிலைமை என்ன? நீங்க சிந்தன ரத்தமெல்லாம் உங்க பிசினஸ மட்டும்தான் வளர்த்திருக்கு, உங்களை இல்லை! இது எவ்ளோ பெரிய ரிஸ்க்?

உண்மையான பிசினஸ் ஓனர்களோட ரகசியம் என்ன?

“கம்பெனி பணத்தை தனியா எடுங்க”னு அட்வைஸ் பண்றது ஈஸி. ஆனா, பணத்தை வெளிய எடுத்தா டாக்ஸ் (Tax) கட்டணுமேங்குற பயம் பல பேருக்கு இருக்கு. அதனாலதான் பெருநிறுவனங்கள் “SME Treasury Management” அப்படிங்குற ஒரு மாஸ்டர் உத்தியை ஃபாலோ பண்றாங்க.

Money |எம்.டி.என்.எல் |MTNL
Money |எம்.டி.என்.எல் |MTNL

அது என்ன ட்ரெஷரி மேனேஜ்மென்ட்?

உங்க கரண்ட் அக்கவுண்ட்ல சும்மா தூங்குற 10 லட்சம் ரூபாயை, வட்டியே இல்லாத பேங்க் கணக்கில் வைக்காமல், உடனே எடுக்கக்கூடிய ‘லிக்விட் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு’ (Liquid Funds) மாற்றுவது முதல் ஸ்டெப். பிசினஸுக்குத் தேவைப்படும்போது ஒரு நாள் நோட்டீஸில் எடுத்துக்கொள்ளலாம், அதேசமயம் சும்மா இருக்கும் அந்தப் பணம் உங்களுக்கு ஒரு லாபத்தை சம்பாதித்துக் கொடுத்துக்கொண்டே இருக்கும்.

இரண்டாவது சூட்சுமம்: ‘Director’s Remuneration’. உங்க கம்பெனியிலிருந்து உங்களுக்கு ஒரு சம்பளத்தை எடுத்து, அதை ELSS அல்லது NPS (National Pension System) போன்ற திட்டங்களில் முதலீடு செய்வது. இதன் மூலம், பிசினஸில் உங்கள் நிறுவனத்துக்கு வரியைக் குறைப்பீர்கள் (Business Expense), அதேசமயம் அந்தப் பணம் உங்களுடைய சொந்தப் பெயரில் தனிப்பட்ட சொத்தாக (Personal Wealth) பல கோடிகளாக வளர்ந்துகொண்டே இருக்கும். பிசினஸ் முடங்கினாலும், நீங்கள் எப்போதுமே ராஜாதான்!

ஆனா, உங்க பிசினஸ் மாடலுக்கு எந்த ஃபண்ட் செட் ஆகும்? கம்பெனி பணத்தைத் தொந்தரவு பண்ணாம நம்ம தனிப்பட்ட சொத்தை எப்படி வரி இல்லாமல் ஏத்துறது? பிசினஸ் பண்றவங்க செய்ற அந்தப் பொதுவான தப்புகள் என்னென்ன?

இதையெல்லாம் எந்த ஆடிட்டரும் உங்களுக்கு இவ்வளவு பிசினஸ் ஆங்கிளில் ஆழமா சொல்லிக் கொடுக்க மாட்டாங்க. உங்க தொழிலையும் வளர்த்து, கூடவே உங்க குடும்பத்தையும் கோடீஸ்வர குடும்பமா ஆக்குற அந்த வெற்றி ரகசியங்களை கத்துக்க ஒரு சூப்பரான வாய்ப்பு இதோ!

பிசினஸ் + வாழ்க்கையில் ஜெயிக்கணுமா? இந்த நிகழ்ச்சி உங்களுக்காக…

தலைப்பு: பிசினஸ் + பர்சனல் ஃபினான்ஸ் – வெற்றி ரகசியங்கள்! – பிசினஸ் ஓனர்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி
நாள்: மார்ச் 18, 2026, புதன்
நேரம்: மாலை 07 மணி – இந்திய நேரம்
பேச்சாளர்: CA குமரேஷ் பாபு, பிசினஸ் மென்டார்

இதுவரைக்கும் உங்க பிசினஸை மட்டும் வளர்த்தது போதும், இனி உங்களையும் வளர்த்துக்கோங்க. பிசினஸ் ஓனர்களுக்காகவே நடக்கும் இந்தச் சிறப்பு நிகழ்ச்சியில சீக்கிரமா உங்க இடத்த புக் பண்ணிடுங்க!

ரெஜிஸ்டர் செய்ய: https://labham.money/events/webinar-mar18-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_mar18_2026

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.