மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள பதற்றம் காரணமாக எரிசக்தி விநியோகத்தில் இடையூறு ஏற்படும் அபாயம் குறித்து கவலை அதிகரித்துள்ள நிலையில், இந்திய விஞ்ஞானிகள் எல்பிஜிக்கு (LPG) மாற்றாக பயன்படுத்தக்கூடிய புதிய எரிபொருள் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். புனேவில் செயல்படும் CSIR-தேசிய வேதியியல் ஆய்வக (CSIR-NCL) விஞ்ஞானிகள், டைய்மெதில் ஈதர் (DME) என்ற எரிபொருளை மெத்தனால் மூலம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த தொழில்நுட்பத்திற்கு காப்புரிமையும் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட சிறப்பு கத்தலிஸ்ட் பயன்படுத்தப்படுகிறது. இதன் […]