" 'வீரம்' படப்பிடிப்பின்போது எனக்கு இட்லி செய்து கொடுத்தார்"- அஜித் குறித்து பகிர்ந்த தமன்னா

தனியார் பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை தமன்னா கலந்துகொண்டிருக்கிறார்.

அந்த நிகழ்ச்சியில் விஜய், அஜித் குறித்து தமன்னா பேசிவை இணையத்தில் வைரலாகி இருக்கின்றன.

மேடையில் பேசிய தமன்னா,” தற்போது ‘புருஷன்’ என்னும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது, அதை பாதியிலேயே விட்டு விட்டு நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன்.

தமன்னா
தமன்னா

நான் முதன் முதலில் நடித்த ‘கல்லூரி’ திரைப்படம் என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. அந்தக் கதை கல்லூரி வாழ்க்கையை அடிப்படையாக கொண்டிருந்தது.

கல்லூரியில் இருக்கும் ஒவ்வொரு தருணங்களையும் நீங்கள் என்ஜாய் செய்ய வேண்டும். இந்தக் காலம் உங்களுக்கு மீண்டும் கிடைக்காது. 21 வருடம் நான் சினிமாவில் இருக்கிறேன். நீங்கள் கொடுக்கும் ஆதரவிற்கு நன்றி” என்றிருக்கிறார்.

தொடர்ந்து விஜய் பற்றிப் பேசிய தமன்னா, ” மிகவும் எளிமையான, மென்மையான மனிதர். நடனம் ஆடுவதில் அவரும், ஜூனியர் என்.டி.ஆரும் தான் சிறந்தவர்கள்” என்று கூறிருக்கிறார்.

வீரம் படத்தில் அஜித், தமன்னா
வீரம் படத்தில் அஜித், தமன்னா

அஜித் பற்றி சொல்லும்போது, ” ‘வீரம்’ திரைப்பட படப்பிடிப்பின்போது கேரவனில் வைத்து எனக்கு இட்லி செய்து கொடுத்தார். அவருக்கு சமைப்பது மிகவும் பிடிக்கும். அவர் மிகவும் நல்ல மனிதர், மென்மையானவர், நல்ல குடும்பஸ்தன்” என புகழ்ந்து பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.