சென்னை: பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பிரபல இலக்கிய எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்துள்ளார். வைரமுத்துவை ‘கீழ்த்தரக் கவிஞர்’ என்றும் ‘சிறுமையாளர்’ என்றும் மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ள ஜெயமோகன், அதிகார பீடங்கள் தமிழைச் சிறுமைப்படுத்தினாலும், தரமான படைப்பாளிகளை முன்னிறுத்தும் முயற்சிகள் தொடரும் என்று கூறியுள்ளார். “வைரமுத்து போன்ற சூழ்ச்சியாளர்கள் வருவார்கள், போவார்கள்; ஆனால் இலக்கியம் என்றும் வெல்லும்” என்று அவர் தனது பதிவை முடித்துள்ளார். கவிஞர் வைரமுத்து இதுவரை 7 […]