சூர்யாவின் 'கருப்பு'வில் சிம்பு பாடிய பவர்ஃபுல் பாடல்; வேகமெடுக்கும் `அரசன்' ஷூட்டிங் – பரபர அப்டேட்

தாணுவின் தயாரிப்பில் வெற்றிமாறன் – சிலம்பரசன் கூட்டணியில் ‘அரசன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வேகம் எடுத்திருக்கிறது. ‘அரசன்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்து பல வாரங்கள் ஆனதும், அதன் அடுத்த ஷெட்யூல் குறித்த அப்டேட்டை சிம்புவின் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்நிலையில் நேற்று இரண்டாவது ஷெட்யூல் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது.

அரசன் - சிம்பு - வெற்றிமாறன்
அரசன் – சிம்பு – வெற்றிமாறன்

படத்தின் இசையமைப்பாளரான அனிருத்தின் பிறந்தநாளின் போது ‘அரசன்’ புரொமோ வீடியோ வெளியானது நினைவிருக்கலாம். அதில் இளமையான சிம்பு, 45 வயது தோற்றத்தில் உள்ள சிம்பு என இரண்டு வித கெட்டப்களில் இருந்த சிலம்பரசனின் தோற்றம் வரவேற்பை அள்ளியது. கடந்த 2006-க்கு முன்னரே ‘அரசன்’ படத்திற்கான கதையை வெற்றிமாறன் எழுதியிருந்தார். படத்தில் சிலம்பரசனின் ஒரு கேரக்டர் பெயர் மதுரை டைகர். மதுரையில் தொடங்கும் கதை, வடசென்னை வரை வருகிறது. மதுரையில் உள்ள ஸ்போர்ட்ஸ் இளைஞன், சென்னைக்கு வருவது ஏன், இங்கே வந்த பின் நடக்கும் அதிரடி சம்பவங்கள் என்ன என்பதுதான், ‘அரசன்’ கதை லைன் என்றும் சொல்கிறார்கள். கோவில்பட்டி, மதுரை பகுதிகளில் நடந்த முதல் ஷெட்யூலில் சிம்புவுடன், சமுத்திரகனி, கிஷோர் ஆகியோர் இணைந்தார்கள்.

சிம்பு, வெற்றிமாறன்.

இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் விஜய் சேதுபதி இணைகிறார். இப்போது சென்னையில் நடந்து வரும் படப்பிடிப்பில் சிம்புவுடன் அமீர், சமுத்திரகனி, விக்ராந்த், ஆண்ட்ரியா எனப் பலரும் நடித்து வருகிறார்கள். முன்னதாக ‘மை லார்ட்’ பட ஹீரோயின் சைத்ராவின் போர்ஷனையும் எடுத்திருக்கிறார்கள். இந்த ஷெட்யூலில் சிலம்பரசன் விஜய் சேதுபதியுடன் மோதும் ஆக்ஷன் காட்சிகள் எடுக்கப்பட உள்ளன. ஹீரோயினாக முன்னணி ஹீரோயின் ஒருவரிடம் நடிக்க கேட்டுள்ளனர். விரைவில் அவர் குறித்த அப்டேட் வெளியாகிறது.

அரசன்

இன்னொரு ஆச்சர்யமான தகவல், சூர்யாவின் ‘கருப்பு’ படத்தில் சிலம்பரசன் ஒரு பாடலை பாடியுள்ளார். ‘கருப்பு’ படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் சமீபத்தில் ‘பவழ மல்லி’ என்ற மியூசிக்கல் ஆல்பம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதை சிலம்பரசன் தான் வெளியிட்டார். அப்போதே, ‘கருப்பு’வில் ஒரு பவர்ஃபுல் பாடல் இருக்கிறது. நீங்க பாடினா நல்லா இருக்கும் என சிம்புவிடம் கேட்டிருக்கிறார். சிம்பு உடனே சம்மதித்ததுடன், அதே வேகத்தில் அந்தப் பாடலை பாடிக்கொடுத்திருக்கிறார். அதேபோல சூர்யாவுடன் இன்னொரு படத்திலும் இணைய உள்ளார். ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தில் சிம்புவிற்கும் ஒரு பெரிய ரோல் இருக்கிறது என்ற பேச்சு இருக்கிறது. இன்னும் சில வாரங்களில் இது குறித்த அப்டேட்டை எதிர்பார்க்கலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.