Jailer 2 Exclusive: 'ஜெயிலர் 2'வில் ஷாருக்கான் கேமியோ; சண்டிகரில் படமாகும் காட்சிகள்!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் மூன்று வருடங்களுக்கு ஒருமுறைதான் ரஜினி காந்த் படம் ரிலீஸாகும்.

இப்போது, 75 வயதில் ‘ஜெயிலர் -2’, அடுத்து ஏப்ரல் மாதத்தில் சிபி சக்ரவர்த்தி டைரக்ஷனில் நடிக்கப் போகிறார். இதற்கிடையில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி & கமல் நடிக்கும் படத்தின் ப்ரமோ வெளியீடு என்று காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பம்பரமாய் சுழன்று நடிக்கிறார் ரஜினி காந்த்.

JAILER 2
JAILER 2

இந்தியாவிலேயே விதவிதமான கார்களை நசுக்கி, உடைக்கும் பெரிய மிஷன்கள் கொண்ட பிரமாண்ட பேக்டரி சண்டிகரில் இருக்கிறது.

அங்கேதான் ‘ஜெயிலர் 2’ படத்துக்காக ரஜினி & ஷாருக்கான் கலந்து கொள்ளும் பிரமிப்பான காட்சிகளைப் படம் பிடிக்கிறார், நெல்சன். முதன் முதலாக ரஜினி & ஷாருக்கான் இணைந்து நடிக்கும் காட்சிகள் ‘ஜெயிலர் 2’ படத்தில் பெரிதாகப் பேசப்படும் அளவுக்குச் சிறப்பாகச் செதுக்கி வருகிறார் டைரக்டர் என்று சிலாகித்துச் சொல்கிறார்கள்.

கமலை விட ரஜினி வயதில் மூத்தவர் என்றாலும் சினிமாவில் சீனியர் கமல் என்பதால் எப்போதும் அவருக்குத் தனி மரியாதை கொடுப்பார் ரஜினி.

தமிழ் சினிமா நிகழ்ச்சிகள் நடக்கும் எல்லா மேடைகளிலும் கமலை, கலையுலக அண்ணா என்றே மரியாதை கொடுத்து அழைப்பது ரஜினியின் வழக்கம்.

முதலில் RK & KH என்று டைட்டில் தயாரித்து ரஜினியிடம் காட்டி இருக்கிறார், நெல்சன். அதைப் பார்த்த ரஜினி பயங்கர டென்ஷனாகி விட்டாராம், பிறகு தன் கையாலேயே KH & RK என்று டைட்டில் மாற்றி எழுதிக் கொடுத்தார் என்று நெகிழ்ந்து போய் சொல்கிறார்கள். ரஜினி & கமல் இணையும் படத்துக்கு தென்னிந்தியாவில் மட்டுமல்ல, ஆல் இந்தியாவிலும் அமோக எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது.

KH x RK
KH x RK

ஏற்கெனவே மம்முட்டியும் ரஜினியோடு நடிக்க விரும்புகிறாராம். அடுத்து ராணுவ வீரன், மாப்பிள்ளை படத்துக்குப் பிறகு ரஜினியோடு நடிக்க சிரஞ்சீவி விருப்பம் தெரிவித்து இருக்கிறாராம்.

பொதுவாக ரஜினி ஒரு படத்தில் கமிட்டாகி முழுமையாக நடித்து முடித்த பிறகே அடுத்த படத்தில் கவனம் செலுத்துவார். ரஜினியின் சினிமா கேரியரில் முதன் முறையாக ஒரே நேரத்தில் மூன்று படங்களில் கமிட்டாகி இருக்கிறார் என்று ஆச்சர்யமாய் அண்ணாந்து பார்க்கிறது, கோடம்பாக்கம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.