'ஈரானிடம் அணு ஆயுதம் இல்லை; கமேனி தன் இறப்பிற்கு பயப்படவில்லை!' – ஜோ கென்ட் 'பரபர' தகவல்கள்

“ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர் இஸ்ரேலின் அழுத்தத்தால் தொடங்கப்பட்டது… மனசாட்சிக்கு விரோதமாக ட்ரம்ப் நிர்வாகத்தின் ஈரான் போரை ஆதரிக்க முடியாது…”

– என்று கூறி நேற்று முன்தினம் தனது அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் ஜோ கென்ட்.

தனது ராஜினாமா குறித்து நேற்று பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் ஜோ கென்ட். அதில் அவர் பேசியிருப்பதாவது…

கமேனி
கமேனி

“ஈரான் திரும்ப தாக்குதல் நடத்தும் என்று தெரிந்து தான் இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது.

தங்களால் போரை தொடங்க முடியும் என்றும், அதற்கு அமெரிக்கா எதிர்வினையாற்றினால் மட்டும் போதும் என்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அரசுக்கு நன்கு தெரியும்.

இப்போதும் சரி… கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்கா தாக்குதலை தொடங்கிய போதும் சரி… ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரிக்கவில்லை.

கமேனிக்கு இறப்பிற்குப் பயப்படவில்லை

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியைக் கொன்றது அமெரிக்காவிற்கு சாதகமாக அமையவில்லை. அதற்குப் பதிலாக, அவருடைய ஆதரவாளர்கள் தான் இன்னும் வலுவானார்கள்.

அயோதுல்லா இறப்பது குறித்து அவர்கள் பயப்படவில்லை. இது அவர் பைத்தியக்காரர் என்பதால் அல்ல. தான் கொல்லப்பட்டாலும், ஈரானில் நடக்கும் ஆட்சி தொடரும் என்று அவருக்கு தெரிந்ததால், அவர் பயப்படவில்லை” என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.