டெல்லி: சீனாவுக்கான இந்திய தூதராக இந்திய வெளியுறவுப் பணி அதிகாரி விக்ரம் துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவக் குடும்பத்தில் பிறந்தவர். இவரின் தந்தை வங்கதேச விடுதலைப் போரில் பங்கேற்ற இந்திய விமானப்படை அதிகாரி ஆவார். விக்ரம் கே. துரைசாமி, மக்கள் சீனக் குடியரசிற்கான இந்தியாவின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். , இவர் தற்போது ஐக்கிய இராச்சியத்திற்கான இந்தியாவின் உயர் ஆணையராகப் பணியாற்றி வருகிறார் (IFS:1992), இவரை மத்தியஅரசு மக்கள் சீனக் குடியரசிற்கான இந்தியாவின் அடுத்த தூதராக […]