AC: ஏசி-யின் நட்சத்திரக் குறியீடுகள் என்ன சொல்கின்றன? – 5 Star – 3 Star AC வித்தியாச கணக்கு என்ன?

ஏசி நட்சத்திர குறியீடு, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. ஒவ்வொரு நட்சத்திர குறியீடுகளும் எதனை கடத்துகிறது.? இது குறித்து தமிழகத்தின் முன்னணி மின்சாதன விற்பனை நிறுவனத்தின் பிராண்டிங் துறையில் ஒரு விளம்பர வடிவமைப்பாளராகப் பணியாற்றி வரும் கணேசன் கூறுவது என்ன?

5 Star – 3 Star AC வித்தியாசங்கள்

மின்சாரச் சிக்கனத்தைப் பற்றிப் பேசும்போது நட்சத்திரக் குறியீடுகள் பற்றி நாம் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு சாதாரண ஏசி ஒரு மணி நேரத்திற்கு பத்து யூனிட் மின்சாரத்தை எடுக்கிறது என்று வைத்துக்கொண்டால், மூன்று நட்சத்திரக் குறியீடு கொண்ட இன்வெர்ட்டர் ஏசி அதை ஏழு யூனிட்டாகக் குறைக்கும்.

அதுவே ஐந்து நட்சத்திரக் குறியீடு கொண்ட ஏசியாக இருந்தால், வெறும் ஐந்து யூனிட் மின்சாரத்திலேயே இயங்கும். இதன் மூலம் உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் குறிப்பிடத்தக்க அளவு மின்சாரக் கட்டணம் மிச்சமாகும். நான்-இன்வெர்ட்டர் ஏசிகளில் மின்சாரச் சேமிப்பு இருக்காது, ஏனெனில் அதில் கட்-ஆஃப் வசதி கிடையாது, அது தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும்.

காற்றின் வீச்சும் குளிர்ச்சித் தன்மையும்

ஏசி வாங்குவதில் மற்றொரு முக்கியமான அம்சம் காற்றின் வீச்சு ஆகும். மூன்று நட்சத்திர ஏசிகளில் பெரும்பாலும் இரண்டு பக்கக் காற்று வீச்சு மட்டுமே இருக்கும். ஆனால் ஐந்து நட்சத்திர ஏசிகளில் நான்கு பக்கக் காற்று வீச்சு, அதாவது இடது, வலது, மேல், கீழ் என அனைத்துப் பக்கங்களிலும் காற்று வீசும் வசதி இருக்கும்.

அதேபோல், ஐந்து நட்சத்திர ஏசிகளின் விங்ஸ் எனப்படும் காற்று மடல்கள் அகலமாக இருக்கும் என்பதால், காற்றைச் சற்றுத் தூரமாக வீசும் திறன் கொண்டது. இதனால் உங்கள் அறை வெறும் ஐந்து நிமிடங்களிலேயே மிகக் குளிர்ச்சியாக மாறிவிடும், ஆனால் மூன்று நட்சத்திர ஏசியில் இது ஏழு முதல் எட்டு நிமிடங்கள் வரை ஆகலாம்.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.