AI யுகத்தில் ஏசியின் உருமாற்றம்!

கால ஓட்டத்திற்கு ஏற்ப விஞ்ஞான தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் இந்த காலத்தில் அனைத்து துறைகளிலும் தற்போது செயற்கை நுண்ணறிவு ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த ஏசி பயன்பாட்டிலும் தன்னுடைய பங்களிப்பை வழங்குகிறது. அறையின் தட்பவெப்ப நிலை மற்றும் ஆட்களின் எண்ணிக்கை ஆகியவற்றை மட்டும் கணக்கில் கொள்ளாமல் ஏசி ஒரு மனிதனின் தேவை இல்லாமல் தானியங்கி இயந்திரமாக வடிவம் பெற்றிருக்கிறது.

தற்போது வரும் ஏசிகள் வெறும் குளிர்ச்சியைத் தருவதோடு நின்றுவிடாமல், செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோ இன்டெலிஜென்ஸ் மோடுடன் வருகின்றன. வெளியில் 52 டிகிரி சென்டிகிரேட் வெயில் கொளுத்தினாலும், இந்த ஏசிகள் அறையைத் துரிதமாகக் குளிர்விக்கும்.

இதில் இருக்கும் கன்வெர்டபிள் வசதி ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம். அறையில் ஆட்களின் எண்ணிக்கையைப் பொறுத்து இது ஏசியின் எடையைத் தானாகவே மாற்றிக்கொள்ளும்.

உதாரணத்திற்கு, அறையில் மூன்று பேர் இருக்கும்போது 1.2 டன்னாக இயங்கும் ஏசி, ஏழு பேர் வந்துவிட்டால் உடனடியாக 1.7 அல்லது 1.8 டன்னாகத் தனது திறனை அதிகரித்துக்கொள்ளும். கேரியர் போன்ற சில நிறுவனங்களில் இதற்காக எஃப் 1 முதல் எஃப் 6 வரை ஆறு விதமான கன்வெர்ட்டர் மோடுகள் வழங்கப்படுகின்றன. இது உடனடி குளிர்ச்சியை வழங்க உதவுகிறது.

கைபேசி வழி கட்டுப்பாடு மற்றும் வைஃபை

தொழில்நுட்பம் வளர வளர ஏசிகளை இப்போது கைபேசி வழியாகவே கட்டுப்படுத்த முடியும். வைஃபை தொழில்நுட்பம் மூலம் நீங்கள் அலுவலகத்தில் வேலைப்பளுவில் இருக்கும்போது கூட வீட்டில் இருக்கும் ஏசியை ஆன் செய்யலாம். வீட்டில் இருக்கும் வயதானவர்களுக்கோ அல்லது குழந்தைகளுக்கோ ஏசியை இயக்கத் தெரியவில்லை என்றால், நீங்கள் தூரத்தில் இருந்தபடியே அதைச் சரிசெய்ய முடியும். ஒருவேளை ஏசியில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், அந்தச் செயலியே எரர் கோடு எனப்படும் பிழைக் குறியீட்டைக் காட்டிவிடும். அதை வைத்து நீங்கள் எளிதாகச் சர்வீஸ் புக் செய்ய முடியும்.

ஆரோக்கியம் மற்றும் வைரஸ் பாதுகாப்பு

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்றைய ஏசிகளில் தூசு வடிகட்டி மற்றும் கிருமிநாசினி வடிகட்டிகள் போன்றவை மிக முக்கியம். குறிப்பாகக் கொரோனா போன்ற வைரஸ்கள் காற்றில் பரவுவதைத் தடுக்க இப்போதைய ஏசிகளில் ஆன்டி-வைரஸ் பில்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை காற்றில் இருக்கும் கிருமிகளைக் கொன்று சுத்தமான காற்றை நமக்கு வழங்குகின்றன. அறைக்குள் இருக்கும் தூசுகளை ஐந்து நிமிடங்களிலேயே இவை வடிகட்டி எடுத்துவிடும். ஆனால் நான்-இன்வெர்ட்டர் ஏசிகளில் இந்த வசதிகள் பெரும்பாலும் இருக்காது, தூசு அடைத்துக் கொண்டு கூலிங் குறைந்துவிடும்.

அமைதியான உறக்கமும் ஸ்லீப் மோடும்

குழந்தைகள் உள்ள வீடுகளில் ஏசி ஓடும் சத்தம் ஒரு தடையாக இருக்கலாம். இன்வெர்ட்டர் ஏசிகளில் ஸ்லீப் மோடு வசதி இருப்பதால், இரவு நேரத்தில் ஏசி சத்தமில்லாமல் இயங்கும். இது மிகச் சிறிய சத்தத்திற்கு கூட விழித்துக் கொள்ளும் குழந்தைகளின் அமைதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும். மேலும், பாலோ மீ தொழில்நுட்பம் உள்ள ஏசிகளில், ரிமோட் எங்கே இருக்கிறதோ அந்த இடத்திற்கு முதலில் குளிர்ச்சி கிடைக்கும்படி செய்ய முடியும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.