'இரட்டை இலக்க தொகுதிகள்; ராஜ்ய சபா சீட்…' – திமுக கூட்டணியில் திடீர் டிமாண்ட் ஏற்றும் திருமா!

திமுகவில் கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தை இழுபறியாகவே போய் கொண்டிருக்கிறது. கறாராக பேசிக்கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டை சரிகட்டி, 5 தொகுதிகளில் கையெழுத்து வாங்கிவிட்டது திமுக. இந்நிலையில், பெரியளவில் வெளிப்படையாக தங்களுடைய எதிர்பார்ப்பை பேசாமல் இருந்த திருமாவளவன், திடீரென கறாராக டிமாண்ட் ஏற்றும் வகையில் ஒரு நகர்வை செய்திருக்கிறார்.

திருமாவளவன்
திருமாவளவன்

திடீரென விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தை கூட்டிய திருமா, அந்தக் கூட்டத்தில் 8 தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார். ஈரான், இஸ்ரேல் விவகாரம் பற்றியெல்லாம் பேசப்பட்டிருக்கும் அவற்றில் எட்டாவது தீர்மானம்தான் முக்கியம்.

திமுக கூட்டணியில் இரட்டை இலக்க தொகுதிகளையும் ராஜ்ய சபா சீட்டையும் கேட்டுப்பெற வேண்டுமென அந்த தீர்மானம் கூறுகிறது. அந்த 8 வது தீர்மானம், ‘திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்று 2019 ஆம் ஆண்டு முதல் இந்தக் கூட்டணியின் வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்களிப்புச் செய்துள்ளது.

திருமாவளவன்
திருமாவளவன்

எனவே, கட்சியின் வலிமைக்கேற்ப எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் ‘இரட்டை இலக்கத்தில்’ தொகுதிகளைக் கேட்டுப் பெற வேண்டுமென்றும், 2028 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவைக்கான தேர்தலில் விசிக’வுக்கு ஒரு இடத்தைக் கேட்டுப் பெற வேண்டுமென்றும், தலைவர் எழுச்சித் தமிழர் அவர்களை இந்த உயர்நிலைக்குழு கேட்டுக்கொள்கிறது.’ எனக் கோரப்பட்டிருக்கிறது.

திருமா என்ன ட்விஸ்ட் கொடுக்கப் போகிறாரோ?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.