டெல்லி: சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் கருத்துக்கணிப்புகள் வெளியிட தடை விதித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, ஏப்ரல் 9 ஆம் தேதி காலை 7 மணி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி மாலை 6.30 மணி வரை வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நடத்துவதோ வெளியிடுவதோ கூடாது என்று அறிவித்துள்ளது. மார்ச் 15ந்தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதிகளை அறிவித்தார். […]