"நீங்கள் 'துரந்தர் 2'வை 'மஸ்ட் வாட்ச்' என்று அழைப்பது.!" – பாராட்டிய ரஜினி; நன்றி சொன்ன இயக்குநர்!

இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில், ரன்வீர் சிங், சாரா அர்ஜூன், மாதவன், அர்ஜூன் ராம்பல் நடிப்பில் உருவான ‘துரந்தர்’ படத்தின் முதல் பாகம் கடந்த டிசம்பர் மாதம் திரைக்கு வந்திருந்தது.

அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான ‘துரந்தர் – தி ரிவெஞ்ச்’ திரையரங்குகளில் கடந்த வாரம் வெளியானது.

Ranveer Singh| Dhurandhar 'The Revenge'
Ranveer Singh| Dhurandhar ‘The Revenge’

இதனுடைய மேக்கிங் அம்சத்திற்காக பாராட்டைப் பெற்றாலும், இப்படம் பேசும் கருத்துக்களுக்காக விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இப்படத்தைப் பார்த்துவிட்டு, அவருடைய எக்ஸ் பக்கத்தில் இப்படத்தைப் பாராட்டி ஒரு பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர், “என்ன ஒரு படம்! பாக்ஸ் ஆபீஸ் கா பாப். ரன்வீர் சிங்கிற்கும், மொத்த படக்குழுவினருக்கும் என்னுடைய பாராட்டுகள். ஒவ்வொரு இந்தியனும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். ஜெய் ஹிந்த்!” எனப் பதிவிட்டிருக்கிறார்.

இதற்கு ரீட்வீட் செய்து இயக்குநர் ஆதித்யா தர், “நாங்கள் வளர்ந்த காலத்தில் பொழுதுபோக்கு என்றால் அது நீங்கள் தான்!

பல தசாப்தங்களாக எங்களை விசில் அடிக்க வைத்து, சிரிக்க வைத்து, அழ வைத்தவர் நீங்கள். இன்றும் அதே ஸ்வாக் உடனும், அழகிய கிரேஸுடனும் அதைத் தொடர்ந்து செய்து வருகிறீர்கள். இது மாயாஜாலம் தான்.

நீங்கள் ‘துரந்தர் 2’ படத்தை ‘மஸ்ட் வாட்ச்’ என்று அழைப்பது, என் வாழ்க்கையின் மிகப் பெரிய ‘சூப்பர் ஸ்டார்’ தருணமாக உணர்கிறேன். இது, நம் அனைவரையும் பெரிய கனவுகளை காணக் கற்றுத் தந்த அந்த மனிதரிடமிருந்தே கிடைத்த ஆசீர்வாதம் போல் இருக்கிறது. ஜெய் ஹிந்த்!” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.