டெல்லி: நாடு முழுவதும் ரயில் டிக்கெட் ரத்து நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதை இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் 1ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வது மற்றும் ரத்து செய்வதில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுக்களை ரயில் புறப்படுவதற்கு முந்தைய 8 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால் கட்டணம் திருப்பித் தரப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி […]