சென்னை: அதிமுக என்பதையே அடிமை திமுக என மாற்றிவிட்டார் இபிஎஸ் என்றும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மாவை சாகடிக்கும் அளவுக்கு எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாக அமைச்சர் சா.சி. சிவசங்கர் விமர்சித்துள்ளார். திமுக கூட்டணி குறித்து அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இது சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதிமுக கூட்டணி குறித்து திமுகவை சேர்ந்த அமைச்சர் சிவசங்கர் கடுமையாக சாடியுள்ளார். “ஒரு காலத்தில் […]