சென்னை: முருகன் கோவில் பங்குனி உத்திரம் இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அதுபோல பல்வேறு முருகன் கோவில்கள், சிவன் மற்றும் சாஸ்தா கோவில்களில் பங்குனி உத்திரம் திருவிழாக்கள் தொடங்கி உள்ளது. பங்குனி உத்திரம் என்பது பங்குனி மாத பௌர்ணமி மற்றும் உத்திர நட்சத்திரம் இணையும் நன்னாளில் கொண்டாடப்படும் மிக முக்கிய இந்து சமய பண்டிகையாகும். இது பார்வதி-பரமேஸ்வரன், முருகன்-தெய்வானை, ராமன்-சீதை போன்ற தெய்வத் திருமணங்கள் நடைபெற்ற நாளாகவும், முருகப் பெருமான் சூரனை வென்ற நாளாகவும் போற்றப்படுகிறது. […]