மதுரை: மதுரை காமராஜா் பல்கலைக்கழக ஊழல் முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிபிஐக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சோ்ந்த வெங்கடேசன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய கோமதி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இருப்பினும், பல்கலைக்கழக நிா்வாகம் அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடா்பாக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவில் புகாா் அளித்தேன். எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை..பிறகு, தகவல் அறியும் […]