மேற்கு ஆசியாவில் நடைபெறும் போர் காரணமாக, இந்தியாவில் ஆணுறை உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால், அதன் விலை அதிகரிக்கும் வாய்ப்பும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கிய மூலப்பொருட்களின் பற்றாக்குறை, குறிப்பாக சிலிகான் எண்ணெய் (PDMS) கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல், அமோனியா விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதாக ஆணுறை தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அமோனியா, லேட்டெக்ஸை நிலைப்படுத்தவும், அதிலுள்ள அதிகப்படியான புரதங்களை நீக்கவும் பயன்படுத்தப்படுகிறது. சிலிகான் எண்ணெய் கண்டோமுக்கு மென் பூச்சாக செயல்படுகிறது. மேலும், பாலித்தீன் ஃபாயில், […]