தஞ்சாவூர்: தேர்தல் பிரசார பயணத்தை தொடங்க திருவாரூர் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினின் பிரசார வாசனத்தை தஞ்சைபகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பறக்கும் படையினர், அரசியல் கட்சி தலைவர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் என பலரது வாகனங்களை அவ்வப்போது சோதனை செய்து வருகின்றனர். கடந்த இரு நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்படியின் வாகனத்தை சோதனையிட்ட அதிகாரிகள், இன்று முதல்வர் ஸ்டாலின் வாகனத்தை சோதனையிட்டுள்ளனர். […]