"அண்ணாமலை அவருடைய பணியை சரியாக செய்து கொண்டு இருக்கிறார்!" – வானதி சீனிவாசன்

கோவை விமான நிலையத்தில் வானதி சீனிவாசன் மற்றும் எல்.முருகனுக்கு பாஜகவினர் மாலை அணிவித்தும், மலர் கிரீடம் அணிவித்தும், மலர் தூவியும் வரவேற்பளித்தனர்.

இருவரும், பிரசாரத்தை துவக்குகின்றோம் எனவும், தமிழகத்தின் அரசியல் சூழல் தே.ஜ.கூவிற்கு மிக சாதகமாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

திமுக அரசு தோல்வி பயத்தால் ஒவ்வொரு நாளும் நாடகத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றது எனவும் பாதுகாப்பு , சட்டம் ஒழுங்கு , போதைப் பொருள்களின் பயன்பாடு போன்றவை அதிகரித்து இருக்கிறது என்றும் தெரிவித்தனர்.

வானதி ஶ்ரீனிவாசன் & எல் முருகன்
வானதி ஶ்ரீனிவாசன் & எல் முருகன்

எங்கள் கூட்டணி குறித்து பேசினார்கள், திமுக கூட்டணிக்குள் இருக்கின்ற அதிருப்திகள் தற்பொழுது வெளியில் வந்து கொண்டு இருக்கின்றது எனவும் மத்திய அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் என பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கின்றனர்.

மக்களின் ஆதரவோடு இந்த தேர்தலில் பாஜகவின் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள் என தெரிவித்தார், வானதி.

அண்ணாமலை போட்டியிடாத காரணத்தை அவரே தெரிவித்துள்ளதாகவும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இதனை தெளிவு படுத்தி உள்ளதாகவும், வரும் நாட்களில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அண்ணாமலை அவர்கள் சிறப்பான முறையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் என குறிப்பிட்டார்.

நாளை மாலை கோவை வடக்கு தொகுதியில் பிரசாரம் செய்கிறார் எனவும், நாளை மறுதினம் எல் முருகனுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய செல்கிறார் எனவும் தெரிவித்த வானதி , அவருடைய பணியை சரியாக செய்து கொண்டு இருக்கிறார் எனவும் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் ஆசீர்வாதம் பெற்று பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவது தான் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரே நோக்கம் என எல்.முருகன்தெரிவித்தார்.

மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் பல வேதனைகளை சந்தித்து வருவதாகவும், கருணாநிதி ,ஸ்டாலின், உதயநிதி ,இன்பநிதி என குடும்ப ஆட்சி நடைபெற்று வருவதாகவும், இதனால் தமிழகத்தின் வளர்ச்சி பெரிதும் தடைபட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

வானதி ஶ்ரீனிவாசன் & எல் முருகன்
வானதி ஶ்ரீனிவாசன் & எல் முருகன்

தமிழகத்தின் வளர்ச்சிக்கு டபுள் இன்ஜின் சர்க்காராக உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான் தேவை எனவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய அரசோடு திமுக அரசாங்கம் அனுசரணையாக இல்லாததால், தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

மீண்டும் மீண்டும் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, கட்சி என்ன சொல்கின்றதோ அதை செய்வதுதான் ஒரு போர் வீரனின் வேலை, இது கட்சியின் விருப்பம் என்னுடைய விருப்பம் அல்ல எனவும் தெரிவித்தார். எங்கள் கட்சியின் கட்டளையை சாதாரண தொண்டனாக எங்கள் பணியினை செய்கிறோம் எனவும் எல். முருகன் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.