"சஞ்சு சாம்சன் எல்லா போட்டிகளிலும் ரன் குவிக்க மாட்டார்.!"- பயிற்சியாளர் பிளெமிங் சொல்வது என்ன?

2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தனது முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி இருக்கிறது.

குறிப்பாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து பெரிய எதிர்பார்ப்புடன் சென்னை அணிக்கு வந்த சஞ்சு சாம்சன், முதல் இரண்டு போட்டிகளிலும் குறைவான ரன்களில் ஆட்டமிழந்தது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்

2026 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றபோது ‘தொடர் நாயகன்’ விருது வென்ற சஞ்சு சாம்சன், சென்னை அணிக்காக விளையாடிய முதல் போட்டியில் 6 ரன்களிலும், சேப்பாக்கத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் சஞ்சு சாம்சன் குறித்து பேசிய சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளெமிங், ” சஞ்சு சாம்சன் எல்லா போட்டிகளிலும் ரன் குவிக்க மாட்டார். இது டி20 கிரிக்கெட், அவர் துரதிர்ஷ்டவசமாக அவுட் ஆகிவிட்டார். ஆனால் அவரது பேட்டிங் ஃபார்ம் நன்றாகவே இருக்கிறது.

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்

பயிற்சியிலும் அவர் சிறப்பாகச் செயல்படுகிறார். அவர் ஒருமுறை நிலைத்து நின்றுவிட்டால் ஆட்டத்தையே மாற்றிவிடுவார். இரண்டு இன்னிங்ஸை வைத்து ஒரு வீரரை எடை போட முடியாது. ரசிகர்கள் பொறுமையாக இருக்க வேண்டும்” என்று சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.