நடிகர் அல்லு அர்ஜுன் ‘புஷ்பா 2’ படத்திற்குப் பிறகு இயக்குநர் அட்லீயுடன் கைக்கோர்த்திருக்கிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்கிறார்.
மேலும் இதில் கஜோல், ராஷ்மிகா மந்தனா, ஜான்வி கபூர், மிருணாள் தாகூர், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் ஜிம் சர்ப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் எனச் சொல்லப்படுகிறது.

Prepare yourself for a vision beyond limits ✨@alluarjun @Atlee_dir @deepikapadukone⁰#राका | #రాకా | #ರಾಕಾ | #ராக்கா | #രാക്ക | #রাকা | راکا# pic.twitter.com/ymTBHoOfpI
— Sun Pictures (@sunpictures) April 8, 2026
இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
பிரமாண்டமாக உருவாக இருக்கும் இப்படத்தின் டைட்டில் டீசர் இன்று (ஏப்ரல். 8) வெளியாகும் என்று படக்குழு என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது படக்குழு டைட்டிலை வெளியிட்டிருக்கிறது. அதன்படி படத்திற்கு ‘RAAKA’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது.