LIK: "என் கேரக்டர் பெயர் வாள மீன்; ரொம்ப வருஷத்துக்குப் பிறகு கம்பேக்" – நடிகை மாளவிகா

விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் ‘LIK’ திரைப்படம், பல தாமதங்களுக்குப் பிறகு வருகிற ஏப்ரல் 10-ம் தேதி திரைக்கு வருகிறது.

‘டிராகன்’, ‘டியூட்’ திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனின் அடுத்த ரிலீஸாக மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகிறது இப்படம்.

LIK - Pradeep Ranganathan
LIK – Pradeep Ranganathan

அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் நேற்று பிரமாண்டமான முறையில் சென்னையில் நடைபெற்றது.

மாளவிகா, “நான் இதுவரைக்கும் 42 படங்கள் பண்ணியிருக்கேன். இதுதான் நானாகவே டப் பண்ணின முதல் திரைப்படம்.

என்னுடைய குரலை நம்பிய விக்கி சார்க்கு நன்றி. பிரதீப் ரங்கநாதன் ஒரு அற்புதமான நடிகர். இந்தப் படத்துக்காக ரொம்ப போராடியிருக்கோம். ரொம்பவே காத்திருந்தோம்.

Actress Malavika
Actress Malavika

பொறுமையைத்தான் இந்தப் படம் எங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கு. இந்தப் படம் நிச்சயமாக சூப்பர் டூப்பர் ஹிட்டாகும்.

மிஸ்கின் சார் எனக்கு வாளமீன் பாடல் கொடுத்தார். இந்தப் படத்துல என்னுடைய கேரக்டர் பெயர் வாள மீன். ரொம்ப வருஷத்துக்குப் பிறகு இந்தப் படம் எனக்கு கம்பேக்.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.