இஸ்ரேல் லெபனானைத் தாக்கியதால், ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் மூடப்பட்டுள்ளது என்று ஈரானிய செய்திகள் கூறுகின்றன.
இன்னொரு பக்கம், ஹார்முஸ் ஜலசந்தியில் நிற்கும் கப்பல்கள் செல்ல வேறு வழியைக் கூறியிருக்கிறது இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை.
ஏன் இந்தப் பாதை மாற்றம் என்று இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் கப்பற்படை அறிக்கை வெளியிட்டுள்ளது.

“ஹார்முஸ் ஜலசந்தியில் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் பாதையில் இப்போது கடல் கண்ணிவெடிகள் இருக்கும் வாய்ப்புகள் உண்டு. மேலும், அந்தப் பிராந்தியத்தில் நடந்துள்ள சமீபத்திய தாக்குதல் அந்தப் பாதையைப் பாதுகாப்பற்றதாக மாற்றியிருக்கலாம்.
இந்த ரிஸ்க்குகளைக் குறைக்க… ஆபத்தான வழித்தடத்தைத் தவிர்க்க, இந்தப் பாதையைப் பயன்படுத்துங்கள்” என்று புதிய பாதை வரைப்படத்தை ஈரான் வெளியிட்டுள்ளது.
இன்னொரு பக்கம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் ஹார்முஸ் ஜலசந்தி குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருக்கும் சாராம்சம் இதுவே – “ஈரான் நாட்டிற்குள்ளும், ஈரான் நாட்டைச் சுற்றியும் இருக்கும் அனைத்து அமெரிக்க கப்பல்கள், விமானங்கள் மற்றும் ராணுவப் படைகள் இறுதி ஒப்பந்தம் முடிவாகும் வரை… அது அமலாகும் வரை அங்கேயே இருக்கும்.
அது நடக்கவில்லை என்றால் இதுவரை யாரும் பார்த்திராத தாக்குதல்கள் அங்கே நடக்கும்.
‘அணு ஆயுதம் இல்லை’ மற்றும் ‘ஹார்முஸ் ஜலசந்தி திறந்திருக்கும் மற்றும் பத்திரமாக இருக்கும்’ என்று ஈரான் ஏற்கெனவே தெரிவித்துள்ளது.
அது நடக்கவில்லை, மீண்டும் தாக்குதல்கள் தொடங்கும்”.