LIK: "யுதன் பாலாஜி என் வாழ்கையில் நல்லவராகவே இருக்கிறார்; SJ சூர்யா…" – பிரதீப் சொல்லும் ரீவைண்ட்

விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் ‘LIK’ திரைப்படம், வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக இருக்கிறது.

‘டிராகன்’, ‘லவ் டுடே’, ‘டியூட்’ படங்களைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.

அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

'LIK'
‘LIK’

இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று முன்தினம் (ஏப்ரல்.7) சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய பிரதீப் ரங்கநாதன், “நிறைய மனிதர்கள் அவர்களுக்கே தெரியாமல் சிறிய சிறிய விஷயங்கள் மூலம் மற்றவர்களின் வாழ்க்கையில் மாற்றங்களை உருவாக்குகிறார்கள்.

அந்தவகையில் என் வாழ்க்கையில் மாற்றங்களை உருவாக்கியவர்கள் எஸ்.ஜே சூர்யா சார், யுதன் பாலாஜி, அஷ்வத் மாரிமுத்து, கார்த்திக் சுப்புராஜ் சார், ஸ்ரீ கார்த்திக் போன்றவர்கள்தான்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

குறிப்பாக எஸ்.ஜே. சூர்யா குறித்து பேசிய பிரதீப் ரங்கநாதன், “எஸ்.ஜே. சூர்யா சார் பற்றி ஒரு விஷயம் சொல்ல வேண்டும். நான் காலேஜ் முடித்த பிறகு அவரிடம் அசிஸ்டென்ட் டைரக்டராக சேர ஆசைப்பட்டேன்.

அவரோட அலுவலகத்துக்குப் போய் ரெஸ்யூம் கொடுத்தேன். அங்க இருந்தவங்க நீங்க போங்கன்னு சொன்னாங்க.

ஆனா அவர் வெளியே வரும்போது பார்க்கலாம் என்று நான் வெளியே போகாமல் எதிரே இருந்த படிக்கட்டில் உட்கார்ந்தேன்.

பிரதீப் ரங்கநாதன்
பிரதீப் ரங்கநாதன்

அப்போது எஸ்.ஜே சூர்யா சார் என்னைப் பார்த்து ‘யார் அந்த பையன்?’ என அவருடன் இருந்த யுதன் பாலாஜியிடம் கேட்டார். யுதன் பாலாஜியை உங்கள் எல்லோருக்கும் தெரியும்.

நான் ஸ்கூல் படிக்கும்போது இவர் ரொம்ப ஃபேமேஸ். கனா காணும் காலங்களில் ஜோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். எனக்கு இவரை ரொம்ப பிடிக்கும். அவர்தான் ‘இவர் உதவி இயக்குநராகச் சேர வந்திருக்கிறாராம் சார்’ என எஸ்.ஜே சூர்யா சாரிடம் சொன்னார்.

என்னை சார் உள்ளே அழைத்தார். ‘நான் உங்களிடம் உதவி இயக்குநராகச் சேர வேண்டும்’னு சொன்னேன். அவர் மீண்டும் ‘ரெஸ்யூம் கொடுத்துட்டீங்களே, போங்க’ன்னு சொன்னார்.

ஆனா அந்தத் தருணம் எனக்கு மறக்க முடியாதது. நான் செய்த குறும்படம் பற்றி சொன்னேன் என்னிடம் நிறைய கேள்வி கேட்டார். நிறைய உலகப்படம் பார்க்கச் சொன்னார்.

எஸ்.ஜே சூர்யா
எஸ்.ஜே சூர்யா

நிறைய விஷ்யங்களைக் கற்றுக்கொண்டு வர சொன்னார். அவரைப் பார்த்தப் பிறகு கீழே வந்தேன். யுதன் பாலாஜி நின்றுகொண்டிருந்தார். அவர் என்னிடம் நான்கு வார்த்தை நல்லதாகச் சொன்னார்.

என்ன சொன்னார் என்று எனக்கு ஞபாகம் இல்லை. ஆனால் நல்லதைச் சொன்னார். அதனால் அவர் என் வாழ்கையில் நல்லவராகவே இருக்கிறார்” என்று பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.