உகாண்டாவில் உள்ள கிபாலே தேசிய பூங்கா பகுதியில் வாழும் சிம்பான்ஸி குரங்குகள் தற்போது கடுமையான கோஷ்டி மோதலில் ஈடுபட்டு வருகின்றன. ஒரே கூட்டமாக இருந்த இவை, இரண்டு பிரிவுகளாகப் பிளந்து, ஒருவரை ஒருவர் தாக்கி கொல்வது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. பொதுவாக சிம்பான்ஸிகள் மற்ற குழுக்களுடன் தான் சண்டை போடுவது வழக்கம். ஆனால் ஒரே குழுவில் இருந்தவர்கள் இப்படியாகப் பிரிந்து போராடுவது மிகவும் அரிதானது. இந்த ஆய்வை அமெரிக்காவின் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த […]