"'LIK' படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் எங்களின் ஆன்மாவும், ரத்தமும் கலந்திருக்கிறது"- விக்னேஷ் சிவன்

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘LIK’.

இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் இன்று (ஏப்ரல். 10) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படம் வெளியாவது குறித்து பதிவிட்டிருக்கிறார்.

LIK
LIK

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “இவ்வளவு செய்யத் தெரிந்த இந்த பிரபஞ்சத்திற்கு, எதையும் செய்யத் தெரியும்!

என்னோடு நின்று, என்னையும் என் வார்த்தைகளையும் நம்பி, எனக்கு உதவிய ஒவ்வொருவருக்கும் நன்றி.

இந்தப் திரைப்படம் இன்று வெளியாக வேண்டும் என்பதற்காக உங்கள் நூறு சதவீத உழைப்பைக் கொடுத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

இந்தப் படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் எங்களின் வியர்வை, இரத்தம், ஆன்மா மற்றும் பெரிய திரையில் பார்க்கிறவர்களை நிச்சயம் உற்சாகப்படுத்தும் என்ற ஆழமான நம்பிக்கையும் கலந்திருக்கிறது.

பெரிய திரைக்கான ஒரு அனுபவத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாக இருந்தது.

இந்த மலை போன்ற கனவு நனவாகத் தோள் கொடுத்த ஒவ்வொரு மனிதருக்கும் என் வாழ்நாள் முழுவதும் நான் கடமைப்பட்டிருப்பேன்.

விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன்

மக்கள் மீது நான் எப்போதும் பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். நான் சமைக்கும் இந்தப் படைப்புகளை அவர்கள் ரசித்து மகிழ்வார்கள் என்ற முழு நம்பிக்கையுடன்தான் நான் படங்களை இயக்குகிறேன்.

அதே நம்பிக்கையோடு நிறைந்த மனதுடன் இன்று திரையரங்கிற்குள் நுழைகிறேன். இந்தப் படம் இன்று வெளியாவதே எனக்குக் கிடைத்த ஒரு பெரிய வெற்றியாக நினைக்கிறேன்.

இந்த நாள் எங்கள் அனைவரின் வாழ்விலும் சாத்தியமானதற்கு இறைவனுக்கும் இந்தப் பிரபஞ்சத்திற்கும் நான் நன்றி கூறுகிறேன்” என்று உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.