இறந்த குழந்தைகளும்; எரிந்த Bag-குகளும்: பாகிஸ்தானிற்கு காலிபாஃபுடன் கிளம்பிய 'இறந்த' தோழர்கள்

ஈரான் போர் தொடங்கிய முதல் நாள் – பிப்ரவரி 28, 2026.

அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானின் உச்ச தலைவர் அயோதுல்லா அலி கமேனியை மட்டும் கொன்று உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தவில்லை.

ஈரானின் மினாப்பில் உள்ள பெண் குழந்தைகள் ஆரம்பப் பள்ளி மீதும் அமெரிக்கா, இஸ்ரேலின் ஏவுகணைகள் விழுந்தது.

இதில் குழந்தைகள் உள்பட 168 பேர் உயிரிழந்தனர்.

இதை உலகத்திற்கு மீண்டும் நியாபகப்படுத்தும் விதமாக, ஈரான் ஒரு சம்பவத்தை செய்துள்ளது.

காலிபாஃப் பதிவு
காலிபாஃப் பதிவு

இன்று போர்‌ நிறுத்தத்திற்காக பாகிஸ்தானில் அமெரிக்கா, ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.

இதில் ஈரான் சார்பாக ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் கலந்துகொள்கிறார்.

இவர் இப்போது பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டார்.

காலிபாஃப் ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்ற விமானத்தில் மினாப் தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளின் புகைப்படம் விமானத்தின் இருக்கையில் வைக்கப்பட்டிருந்தது.

புகைப்படங்களுடன் அந்தக் குழந்தைகளின் எரிந்த பேக்குகளும் வைக்கப்பட்டிருந்தன.

அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து “இந்த விமானத்தில் என்னுடைய தோழர்கள்” என்று பதிவிட்டுள்ளார் காலிபாஃப்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.