RCB vs MI: "விராட் பாயும், சால்ட்டும் தொடங்கிய விதம் தான் எங்களை.."- வெற்றி குறித்து ரஜத் பட்டிதார்

ஐபில் தொடரில் நேற்று (ஏப்ரல்12) நடைபெற்ற மும்பை vs பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் பாயின்ட்ஸ் டேபிலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

rcb vs mi match
rcb vs mi match

இந்த வெற்றிக்குப் பின்னர் பேசிய பெங்களூரு அணி கேப்டன் ரஜத் பட்டிதார், “இப்போது நான் மிகவும் அற்புதமாக உணர்கிறேன். நாங்கள் எப்போது மும்பை வந்தாலும், குறிப்பாக இந்த மைதானத்தில் விளையாடும்போது, இங்கிருக்கும் சூழல், ரசிகர்கள் நிறைந்திருக்கிற ஸ்டேடியத்தில் விளையாடுவது ஒரு தனி உணர்வைத் தருகிறது.

ஒவ்வொரு வீரருக்கும் ஒரு தெளிவு இருந்தது என்றுதான் நான் சொல்வேன். விராட் பாயும், சால்ட்டும் இன்னிங்ஸைத் தொடங்கிய விதம் எங்களை முன்னிலையில் கொண்டு சென்றது.

அதன்பிறகு நானும் டிம் டேவிட்டும் ஆடிய கேமியோ ஆட்டம் ஒரு சிறந்த கூட்டு முயற்சி. உண்மையைச் சொல்லப்போனால், எனக்கு சுழற்பந்து வீச்சுதான் பிடிக்கும் என்று மக்கள் சொல்வார்கள். ஆனால் என்னிடம் கேட்டால், எனக்கு வேகப்பந்து வீச்சை எதிர்கொள்வதுதான் பிடிக்கும் என்று சொல்வேன்.

rcb vs mi match
rcb vs mi match

இந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள மிகவும் சாதகமாக இருந்தது. விராட் கோலியின் காயம் பற்றி எனக்கு இன்னும் சரியாகத் தெரியவில்லை, ஆனால் அவர் இப்போது நலமாக இருக்கிறார் என்று நினைக்கிறேன்” என்று பேசியிருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.