பாரதியார் பல்கலைக் கூடத்தில் இளங்கலை பட்டப் படிப்பிற்கு நேரடி சேர்க்கை

புதுச்சேரி, : பாரதியார் பல்கலைக்கூடத்தில் இளங்கலை பட்டப் படிப்பிற்கு நேரடி சேர்க்கை நடக்கிறது.புதுச்சேரி, அரியாங்குப்பத்தில் பாரதியார் பல்கலைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு பி.பி.ஏ., (இளங்கலை இசை மற்றும் நடனம்) படிப்பிற்கு 2021-22ம் ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை நடக்கிறது.

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற வர்கள், இப்படிப்பில் சேர தகுதியானவர்கள். நாளை 31ம் தேதி மாலை 5:00 மணி வரை நேரடி சேர்க்கை நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு பல்கலைக்கூட முதல்வரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.மேலும், [email protected]. 0413-2600935- 7639261900 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இத்தகவலை பல்கலைக் கூட முதல்வர் போஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.