சமீப காலமாக சமூகவலைத்தளங்களில் கண்களை குழப்பம் விதமான ஆப்டிக்கல் இல்யூஷன் இமேஜ்கள் வைரலாக பரவி வருகிறது. ஒரு புகைப்படத்தில் நம் கண்களுக்குத் தெரியும் காட்சி, சிலருக்கு வேறு மாதிரியாகவும், கூர்ந்து கவனித்தால் முற்றிலும் வேறாகவும் தோன்றும்.சில வகை ஆப்டிக்கல் இல்யூஷன் ஓவியங்கள் அதனுள் மறைந்திருக்கும் ரகசியத்தை தேடி கண்டுபிடிக்க உங்களை தூண்டும் புதிர் விளையாட்டு போல் இருக்கும்.
அத்தகைய புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதில், ஒரு கோபமான மனிதனின் முகத்தை கண்டுபிடியுங்கள் என்கிற சவாலை இணையவாசிகள் முன்வைக்கின்றனர்.
இந்த புகைப்படத்தை ஆன்லைனில் பதிவிட்ட நபர் ஒருவர், இன்று, ஹம்பர்டோ மச்சாடோ வரைந்த இல்யூஷன் படத்தை கொண்டு வந்துள்ளேன். இது, ஒரு கோபமான முகமா அல்லது சோகமான முகமா?” என்பதை கண்டுபிடியுங்கள் என குறிப்பிட்டிருந்தார்.

சாதாரணமாக புகைப்படத்தை பார்த்தால், சோகமான மனிதன் புகைப்படம் தான் தெரியும். ஆனால், கோபமான முகத்தை கண்டுபிடிப்பது தான் உங்கள் டாஸ்க்…
என்ன இன்னும் கண்டுபிடிக்கமுடியவில்லையா… பதிலை கீழே காணலாம்.
இந்த ஓவியம் சோகமான முகத்தை தான் நமக்கு காட்டுவது போல் வரையறப்பட்டுள்ளது.ஆனால், சிறிய ட்ரிக்கை உபயோகித்தால், கோபமான முகத்தை கண்டுப்பிடிக்கலாம். உங்கள் கையை எடுத்து, புகைப்படத்தில் தெரியும் முகத்தின் வலது பக்கத்தை மூடினால் போதும், எளிதாக கோபமான முகத்தை கண்டறிந்துவிடலாம்.

இந்த போட்டோவை உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பு சேலஞ்ச் செய்யுங்கள்.