பாரத் பே, ட்ரெல் நிறுவனங்களைத் தொடர்ந்து சிங்கப்பூர் Zilingo நிறுவனத்தில் சிஇஓ-வாக இருக்கும் இந்தியரான அங்கிதி போஸ் நிதி முறைகேடுகள் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டு ஸ்பெண்ட் செய்யப்பட்டவர் தற்போது மொத்தமாக வெளியேற்றப்பட்டார்.
இந்தச் செய்தி சிங்கப்பூர் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் மட்டும் அல்லாமல் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு.. பள்ளி, அலுவலகம் விடுமுறை..!
சிங்கப்பூர் Zilingo
சிங்கப்பூரின் முன்னணி பிசினஸ் டு பிசினஸ் (B2B) ஃபேஷன் ஸ்டார்ட்அப் நிறுவனமான Zilingo-வின் தலைமை நிர்வாக அதிகாரியான அங்கிதி போஸ் நிறுவன பணத்தில் முறைகேடுகள் செய்ததாகக் கூறி மொத்தமாகப் பதவி மற்றும் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
அங்கிதி போஸ்
அங்கிதி போஸ்-ன் முறைகேடுகளை நிறுவனத்தின் பங்குதாரர்கள், நிர்வாகக் குழு மற்றும் நிறுவனர் இடையே நீண்ட காலமாக நிலவி வந்த விசாரணை மற்றும் சர்ச்சை தற்போது முடிவுக்கும் வந்தது. இந்த முறைகேடு காரணமாக அங்கிதி போஸ் ஏப்ரல் 12 ஆம் தேதி போஸ் நிறுவனத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தற்போத மொத்தமாக வெளியேற்றப்பட்டு உள்ளார்.
நிதி முறைகேடு
Zilingo நிறுவனத்தில் நடந்த நிதி முறைகேடுகள் குறித்த புகார்களை விசாரிக்கப் பங்குதாரர்கள், நிர்வாகக் குழு சேர்ந்து தனிப்பட்ட தடயவியல் நிறுவனத்தை நியமித்தது. இந்நிறுவனத்தின் தலைமையில் விசாரணை நடத்தியதில் பல உண்மைகள் வெளியானது, இதனால் நிர்வாகம் இறுதியாக அங்கிதி போஸ்-ஐ பணிநீக்கம் செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்ய முடிவு செய்துள்ளது நிர்வாகம்.
குற்றச்சாட்டுகள்
தென்னாசிய பகுதியில் மிகவும் புகழ்பெற்ற நிறுவனமாக விளங்கும் Zilingo நிதி முறைகேடுகள் மட்டும் அல்லாமல் மற்றொரு பிரச்சனையிலும் சிக்கியுள்ளது. இதேவேளையில் அங்கிதி போஸ் நிர்வாகக் குழு முன்பு சில துன்புறுத்தல் (harassment) புகார்களை முன்வைத்தார்.
சிகோயா கேப்பிடல்
இந்தப் புகார்களை விசாரிக்க Zilingo நிர்வாகக் குழு Deloitte நிறுவனத்தை நியமித்தது. வெறும் 30 வயதே ஆன அங்கிதி போஸ் Zilingo நிறுவனத்திற்கு முன்பு சிகோயா கேப்பிடல் என்னும் மாபெரும் முதலீட்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
யூனிகார்ன் மிஸ் ஆனது..
Zilingo 2019இல் அதன் கடைசி முதலீட்டுச் சுற்றில் 226 மில்லியன் டாலரை Sequoia Capital, Temasek மற்றும் பிறர் முதலீட்டாளர்களிடம் இருந்து 970 மில்லியன் டாலர் நிறுவன மதிப்பீட்டில் திரட்டியது. மேலும் சிகோயா கேப்பிடல் நிறுவனத்திடம் இருந்து கூடுதலாக 200 மில்லியன் டாலர் முதலீட்டை 1.2 பில்லியன் டாலர் மதிப்பிட்டில் திரட்ட திட்டமிட்ட போது தான் நிதியியல் முறைகேடுகள் பிரச்சனை வெளியானது.
Singapore based Zilingo fired Indian CEO Ankiti Bose on serious financial irregularities
Singapore based Zilingo fired Indian CEO Ankiti Bose on serious financial irregularities சொந்த நிறுவனத்தில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட அங்கிதி போஸ்.. சிங்கப்பூரில் நடந்தது என்ன..?