தமிழ்நாட்டில் எவ்வளவு தங்க இருப்பு உள்ளது தெரியுமா..?

பீகார் மாநிலத்தின் நிதிஷ் குமார் அரசு, இந்தியாவின் மிகப்பெரிய தங்க இருப்பு கொண்டு இருக்கும் பகுதியில் ஆய்வு செய்ய அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது.

இதன் முதல் அடுத்த ஒரு மாதத்தில் தங்க உற்பத்தி செய்வதகாக மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டு வருகிறது.

சரி தமிழ்நாட்டில் எவ்வளவு தங்க இருப்பு இருக்கிறது தெரியுமா..?

தங்கம் உற்பத்தி செய்யும் பீகார் அரசு.. இந்தியாவிலேயே அதிக தங்கம் வைத்துள்ள மாநிலம் இதுதான்..!

 501.83 மில்லியன் டன் தங்கம்

501.83 மில்லியன் டன் தங்கம்

நேஷனல் மினரல் இன்வென்டரி தரவுகளின்படி, 1.4.2015 நிலவரப்படி, நாட்டில் உள்ள தங்கத் தாதுவின் (முதன்மை) மொத்த இருப்பு/வளங்கள் 501.83 மில்லியன் டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தங்க தாது

தங்க தாது

இவற்றில் 17.22 மில்லியன் டன்கள் இருப்புப் ரிதர்வ் பிரிவின் கீழும், மீதமுள்ள 484.61 மில்லியன் டன்கள் மீதமுள்ள வளப் (Resource) பிரிவின் கீழும் பிரிக்கப்பட்டு உள்ளது என மத்திய சுரங்க துறை ஜூலை 2021ல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மாநிலம்
 

மாநிலம்

மேலும் இந்த அறிக்கையில் இந்தியாவில் அதிக தங்கத் தாதுக்கள் இருக்கும் மாநிலங்களையும், அதன் அளவீட்டையும் மத்திய சுரங்க துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையின் படி தமிழ்நாட்டில் எவ்வளவு தங்கம் இருக்கு தெரியுமா..?

பீகார் முதல் இடம்

பீகார் முதல் இடம்

நேஷனல் மினரல் இன்வென்டரி தரவுகளின்படி இந்தியாவில் அதிக தங்க வளங்கள் கொண்ட மாநிலமாக பீகார் விளங்குகிறது. மொத்த தங்க தாது இருப்பில் பீகாரில் மட்டும் சுமார் 44 சதவீதம் உள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே அதிகப்படியான தங்க தாது இருக்கும் மாநிலமாக விளங்குகிறது.

முக்கிய மாநிலங்கள்

முக்கிய மாநிலங்கள்

பீகார் மாநிலத்தை தொடர்ந்து இந்தியாவிலேயே அதிக தங்க தாது இருக்கும் இடம் ராஜஸ்தான் மொத்த இருப்பில் 25 சதவீதம் இம்மாநிலத்தில் உள்ளது. இதை தொடர்ந்து கர்நாடக-வில் 21 சதவீதம், மேற்கு வங்கத்தில் 3 சதவீதம், ஆந்திரப் பிரதேசத்தில் 3 சதவீதம், ஜார்கண்ட்-ல் 2 சதவீதம் உள்ளது.

தமிழ்நாடு

தமிழ்நாடு

மீதமுள்ள 2 சதவீத தங்க தாது-வில் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ளன. தங்கம் உட்பட எந்த ஒரு கனிமத்தையும் பிரித்தெடுக்கும் செலவுகள் பெரிய அளவில் மாறுப்படும்.

இந்திய புவியியல் ஆய்வு மையம்

இந்திய புவியியல் ஆய்வு மையம்

தங்கம் உள்ளிட்ட பல்வேறு கனிமப் பொருட்களுக்கான கனிம ஆய்வுகளுக்கு பின்பு இந்தியா முழுவதும் கனிம வளமான மண்டலங்களைக் கண்டறியும் பணிகளை இந்திய புவியியல் ஆய்வு மையம் (ஜிஎஸ்ஐ) தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் அடிப்படையில் தான் தற்போது பீகார் அரசு தங்கம் உற்பத்திக்கான முதல் படியை எடுத்து வைத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

How much Gold Reserves in the Tamilnadu; check which states having more Gold resource

How much Gold Reserves in the Tamilnadu; check which states having more Gold resource தமிழ்நாட்டில் எவ்வளவு தங்க இருப்பு உள்ளது தெரியுமா..?

Story first published: Sunday, May 29, 2022, 21:06 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.