சென்னையில் 50 வருடங்கள் பழமையான கார்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதனை பொதுமக்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
சென்னை ஈசிஆர் சாலையில் இந்த பழமையான கார் அணிவகுப்பு நடைபெற்றது. சாலையின் இரு புறங்களிலும் பொதுமக்கள் பழமையான கார்களை பார்த்து ரசித்தனர்.
‘சென்னை கிளாசிக் கார் கிளப்’ தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, ஓஎம்ஆர் சாலை முதல் ஈசிஆர் சாலை வரை 50 வருட பழமையான 12 கார்கள் கார்களின் அணிவகுப்பு நடைபெற்றது.
இந்த பழைய கார்களின் அணிவகுப்பை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.
இந்த அணிவகுப்பில் இறுதியில், ‘இதுபோன்ற பழமையான கார்களை பயன்படுத்துவதற்காக அரசு அனுமதி வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கையை கிளாசிக் கார் கிளப் முன்வைத்தது.