டெல்லி: மேகதாது அணை கட்ட விரைவில் அனுமதி வழங்க ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கோரிக்கை விடுத்துள்ளார். ஒருநாள் பயணமாக டெல்லி சென்ற பசவராஜ், கர்நாடக இல்லத்தில் சட்ட வல்லுநர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ள முதல் திட்ட அறிக்கைக்கு அனுமதி வழங்க பசவராஜ் வலியுறுத்தினார்.
