புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அவரது மாளிகையில் நேற்று சந்தித்து பேசினார்.
குடியரசுத் தலைவர் அழைப்பின் பேரில் சந்தித்ததாக அவர் கூறியுள்ளார். அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்துப் பேசினார். குடியரசுத் தலைவர் அழைப்பின்பேரில் அவரை சந்தித்தாக இரானியும் குறிப்பிட்டுள்ளார். ஒரே நாளில் 2 மத்திய அமைச்சர்கள் அடுத்தடுத்து குடியரசுத் தலைவர் முர்முவை சந்தித்துள்ளது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.