கண்ணிவெடிகளை தேடித்தேடி வெடிக்கச்செய்யும் உக்ரைனியர்கள்! வைரலாகும் வீடியோக்கள்


கண்ணிவெடிகளை அகற்ற உக்ரேனியர்கள் குச்சிகள் மற்றும் டயர்களைப் பயன்படுத்துகின்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றனர்.

உக்ரைனில் கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்த காலகட்டத்தில், ரஷ்யப் படைகள் நாட்டின் பல பகுதிகளில் ஆழமாக ஊடுருவியுள்ளன, ஆனால் எந்த பெரிய நகரத்தையும் கைப்பற்ற முடியவில்லை.

எண்ணிக்கையில் குறைவான உக்ரேனிய இராணுவத்தால் முன்வைக்கப்பட்ட கடுமையான எதிர்ப்பின் காரணமாக அவர்கள் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எதிரிப் படைகளை பின்னுக்குத் தள்ளுவதில் பொதுமக்களும் முக்கியப் பங்காற்றியுள்ளனர்.

ஆனால் தற்போது, ​​சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோக்கள், ரஷ்ய ராணுவம் விட்டுச் சென்ற கண்ணிவெடிகளை அகற்ற உக்ரைன் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மரக்கிளைகள், செங்கல் மற்றும் டயர்களைப் பயன்படுத்துவதைக் காட்டுகிறது.

கண்ணிவெடிகளை தேடித்தேடி வெடிக்கச்செய்யும் உக்ரைனியர்கள்! வைரலாகும் வீடியோக்கள் | Ukrainians Use Sticks Bricks Tyres Clear Landmines

நூற்றுக்கணக்கான வெடிபொருட்கள் மற்றும் கண்ணிவெடிகள் உக்ரைனில் சுற்றிக் கிடக்கின்றன, அவை வீடுகள், கடற்கரைகள் மற்றும் பிற இடங்களில் கண்ணி வெடிகளாக மறைக்கப்பட்டுள்ளன.

இந்த கண்ணிவெடிகளை செயலிழக்கச் செய்வதற்காக வீரர்கள் அணுகும்போது, ​​உடல் கவசம் உள்ளிட்ட தொழில்முறை உபகரணங்களைப் பயன்படுத்துவர். ஆனால் இப்போதைய சூழலில் சரியான கியர் இல்லாததால், கண்ணிவெடிகளை வெடிக்க கையில் கிடைக்கும் பொருட்களையெல்லாம் பயன்படுத்துகின்றனர்.

ட்விட்டரில் வெளியாகியுள்ள வீடியோவில், புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடியை இராணுவ வீரர் ஒருவர் செங்கல்லை எறிந்து வெடிக்கச்செய்யும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

மற்றொரு வீடியோவில், இராணுவ வீரர் ஒருவர் சாலையில் உள்ள ஒரு கண்ணிவெடியின் மீது டயரை வீசி வெடிக்க செய்கிறார். குண்டு வெடிக்கும்போது அந்த டயர் பறப்பதை பார்க்கமுடிகிறது. மேலும் இதுபோன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு, கொலம்பிய வீரர்கள் குழு ஒன்று ஐரோப்பாவிற்கு கண்ணிவெடி அகற்றும் நுட்பத்தில் உக்ரேனிய துருப்புக்களுக்கு பயிற்சி அளித்தது.

மக்கள் வசிக்கும் பகுதிகளில் வீசப்பட்டுள்ள இந்த சிறிய வகை கண்ணவெடிகள் மனிதர்களின் உடல்கள் அல்லது கை கால்களை வெடித்துச் சிதறடிக்க போதுமானதாகும். இதனை anti-personnel mines PFM-1 “Petal’ என குறிப்பிடுகின்றனர்.





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.