
உண்மை சம்பவத்தை படமாக்கும் புதுமுகங்கள்
பத்மஜா பிலிம் பேக்டரி சார்பில் டாக்டர். ஹனுமந்த் ராவ் தயாரிக்கும் படம் இக் ஷு. வி.வி.ருஷிகா இயக்குகிறார். இந்த படத்தில் ராம் அக்னிவேஷ் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். ராஜீவ் கனகலா, பாகுபலி பிரபாகர், சித்திரம் சீனு மற்றும் பலர் நடித்துள்ளார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்தப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றம் இந்தி மொழிகளில் வெளியாகிறது. தற்போது படப்பிடிப்பு நிறைவுற்று இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியாகிறது. புதுமுகங்கள் இணைந்து ஒரு உண்மை சம்பவத்தை படமாக்கி உள்ளனர்.