
படப்பிடிப்பில் விபத்து : ஷில்பா ஷெட்டி கால் எலும்பு முறிந்தது
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தற்போது இந்தியன் போலீஸ் போர்ஸ் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இதில் சித்தார்த் மல்ஹோத்ரா ஹீரோ. ரோஹித் ஷெட்டி இயக்குகிறார். இதில் ஷில்பா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் மும்மையில் நடந்து வருகிறது. ஷில்பா ஷெட்டி மாபியா கும்பல் ஒன்றை துரத்தி பிடிப்பது போன்ற காட்சி நேற்று காலை படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக ஷில்பா தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவர் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவ பரிசோதனையில் அவரது இடது கால் எலும்பு முறிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது ஷில்பா சிகிச்சை பெற்று வருகிறார். படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.