பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டில் அரசுப் பள்ளி மாணவியருக்கு போக்சோ சட்டம், பெண் உரிமை குறித்து போலீசார் நேற்று விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர். பள்ளிப்பட்டு அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் உதவி காவல் ஆய்வாளர் நாகபூஷணம், சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கோபால் ஆகியோர் பங்கேற்று மாணவியருக்கு எதிராக நடைபெறும் சமூக விரோத செயல்கள் குறித்தும் சட்ட ரீதியில் எதிர்க்கொண்டு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர். குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள், கேலி, கிண்டல், பாலியல் பலாத்காரம் போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது, பெண் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தபட்டது.
