
ஷாரூக்கான் படம் : விஜய் சேதுபதிக்கு இவ்வளவு சம்பளமா
தொடர்ந்து ஹீரோவாக நடித்து வந்த விஜய் சேதுபதி, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்டை படத்தில் வில்லனாக உருவெடுத்தார். அதன் பிறகு விஜய்யின் மாஸ்டர், கமலின் விக்ரம் போன்ற படங்கள் நடித்தவர், தெலுங்கிலும் உப்பெனா என்ற படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். இப்படி அவர் வில்லனாக நடித்த அனைத்து படங்களுமே ஹிட் அடித்துள்ளன.
இந்த நிலையில் தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்து வரும் ஜவான் படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார். நயன்தாரா, தீபிகா படுகோனே ஆகியோர் நாயகிகளாக நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்கு விஜய் சேதுபதி 21 கோடி சம்பளம் பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஹீரோவாக நடிப்பதற்கு 10 முதல் 15 கோடி சம்பளம் வாங்கி வந்த விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதற்கு அதிக சம்பளம் வாங்கி இருப்பது சினிமா வட்டாரங்களில் ஆச்சரியமாக பேசப்பட்டு வருகிறது.