சென்னை : இயக்குநர் ஷங்கர் பல வெற்றிப் படங்களை கொடுத்து இந்திய அளவில் சிறப்பான டைரக்டராக உள்ளார்.
தற்போது கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்டவர்கள் கூட்டணியில் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர்.
தொடர்ந்து தெலுங்கில் இயக்கிவந்த ராம்சரணினி ஆர்சி 15 படத்தை தொடர்ந்து இயக்குவார் என்று தகவள்கள் தெரிவிக்கின்றன.
இயக்குநர் ஷங்கர்
இயக்குநர் ஷங்கர் சர்வதேச அளவில் சிறப்பான இயக்குநராக உள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான பல படங்கள் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்று இவருக்கு சர்வதேச அளவில் அங்கீகாரத்தை கொடுத்துள்ளது. பிரம்மாண்டமே ஷங்கரின் தாரக மந்திரம். இவரது படத்தை பிரம்மாண்டத்திற்காகவே ரசிகர்கள் அதிகமாக பார்த்து வருகின்றனர்.

இந்தியன் படம்
இவரது இந்தியன் படம் கமல், சுகன்யா, கஸ்தூரி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு தொடர்ந்து ரசிகர்களிடம் மட்டுமில்லாமல் விமர்சகர்கள் உள்ளிட்டவர்களிடம் காணப்பட்டது.

இந்தியன்2 படத்தில் இணைந்த ஷங்கர்
இதனிடையே ராம்சரணின் ஆர்சி15 படத்தை துவக்கி இயக்கி வந்தார் ஷங்கர். இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு தற்போது சூட்டிங் துவங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் காஜல் அகர்வால் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். இந்தப் படத்தை முடித்துவிட்டு மீண்டும் ராம்சரணின் படத்தை ஷங்கர் தொடர்வார் என்று கூறப்பட்டுள்ளது.

ஷங்கரின் அடுத்தப்படம்
இந்நிலையில் ஷங்கர் இந்தப் படங்களை தொடர்ந்து தமிழில் வேள்பாரி கதையை மையமாக கொண்டு தனது அடுத்தப்படத்தை இயக்குவார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. ஆனால் தற்போது இந்தக் கதையில் பிரபல கேஜிஎப் நடிகர் யஷ் கதாநாயகரனாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நெட்பிளிக்ஸ் -கரண் ஜோஹர் தயாரிப்பு
இந்தப் படத்தை நெட்பிளிக்ஸ் மற்றும் கரண் ஜோஹர் இணைந்து தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து இந்தப் படம் உருவாக உள்ளது சிறப்பாக பார்க்கப்படுகிறது.

ஷங்கருடன் இணையும் சூர்யா
முன்னதாக விருமன் படத்தின் பிரமோஷன் பணிகளின்போது நடிகர் சூர்யா, இயக்குநர் ஷங்கருடன் இணைந்து படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். இது வேள்பாரியாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அந்தக் கதையில் யஷ் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.