சென்னை : சிம்பு -கௌதம் மேனன் கூட்டணியில் இன்னும் இரு தினங்களில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது வெந்து தணிந்தது காடு படம்.
இந்தப் படத்தின் ட்ரெயிலர், போஸ்டர்கள் உள்ளிட்டவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், முன்னதாக வெளியான பாடல்களும் சிறப்பான வரவேற்பை பெற்றது.
ஏஆர் ரஹ்மான் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது அடுத்த பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.
வெந்து தணிந்தது காடு படம்
நடிகர் சிம்பு -கௌதம் மேனன் கூட்டணிக்கு எப்போதுமே ரசிகர்களிடையே மிகச்சிறந்த வரவேற்பு இருக்கும். இவர்கள் இருவரும் முன்னதாக விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களில் இணைந்து வெற்றியை கொடுத்த நிலையில், வரும் 15ம் தேதி இவர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படம் ரிலீசாகவுள்ளது.

சிறப்பான எதிர்பார்ப்பு
இந்தப் படம் மிகச்சிறந்த வெற்றிப் படைப்பாக அமையும் என்று ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் கணித்துள்ளனர். கண்டிப்பாக சிம்புவிற்கு இந்தப் படம் அதிகமான விருதுகளை குவிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். மாநாடு படத்திற்கு பிறகு இந்தப் படம் மீண்டும் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்
மாநாடு படத்தின் சிறப்பான வெற்றி மற்றும் சிம்புவின் நடிப்பு அவருடைய வெந்து தணிந்தது காடு படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தப் படத்தின் புக்கிங்குகள் துவங்கப்பட்டு, அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறப்பான பிரமோஷன்கள்
இந்தப் படத்தின் பாடல்கள், போஸ்டர்கள் போன்றவை முன்னதாக வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்தது. தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ட்ரெயிலர் மற்றும் இசை வெளியீடும் சிறப்பாக அமைந்தது. தொடர்ந்து படத்தின் பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

வெந்து தணிந்தது காடு பேருந்து
படத்தின் சிறப்புகளை கூறும் வகையில் வெந்து தணிந்தது காடு பேருந்தும் தமிழகத்தில் சுற்றி வருகிறது. இந்தப் பேருந்தின் பயணத்தை சில தினங்களுக்கு முன்பு இயக்குநர் கௌதம் மேனன் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் துவக்கி வைத்தனர். இந்நிலையில் படத்தின் ட்ரெயிலர் மற்றும் இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

லிரிக் வீடியோ வெளியானது
முன்னதாக படத்தின் லிரிக் வீடியோ பாடல்கள் வெளியான நிலையில், தற்போது படத்தின் மற்றொரு பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது. ஏஆர் ரஹ்மான் இசையில் இந்தப் பாடல் மெலடி பாடலாக வெளியாகியுள்ளது. பாடலுக்கான வரிகளை கவிஞர் தாமரை எழுதியுள்ளார். மிகவும் சிறப்பான வரிகளுடன் இந்தப் பாடல் வெளியாகியுள்ளது.

காதலின் நிலைகளை சொல்லும் பாடல்
உன்ன நெனச்சதும் என்று துவங்கும் இந்தப் பாடல் காதலின் அடுத்தடுத்த நிலைகளை கூறும் வகையில் அமைந்துள்ளது. ஏஆர் ரஹ்மான் இந்தப் பாடலின் வரிகளுக்கு தன்னுடைய இசையால் உயிர் கொடுத்துள்ளார். ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை இந்தப் பாடல் கொடுத்துள்ளது.