லாட்டூர்: மராட்டியத்தில் லாட்டூர் மாவட்டம், ஹசோரி கிராமத்தில் பூமிக்கு அடியில் இருந்து மர்ம சப்தம் கேட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனினும் பூவியதீர்வு தொடர்பான அறிகுறி ஏதும் ஹசோரி கிராமத்தில் தெரியவில்லை என்று அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மராட்டிய மாநிலம் லாட்டூர் மாவட்டத்தில் கில்லாரியில் இருந்து 28 கி.மீ தொலைவில் உள்ளது ஹசோரி கிராமம். இப்பகுதியில், செப்டம்பர் 8ம் தேதியில் இருந்தே பூமிக்கு அடியில் இருந்து கடமுடா என்ற மர்ம சப்தம் கேட்டு வருவதாக மக்கள் புகார் அளித்துள்ளனர்.
1993ல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு, லாட்டூர் மாவட்டம், நிலங்கா தாலுகாவில் 9,700 பேர் உயிரிழந்தனர். 1993ல் நிலநடுக்கம் ஏற்பட்ட கில்லாரி கிராமத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவில் தான் ஹசோரி கிராமம் அமைந்துள்ளது. ஹசோரி கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்திய லாட்டூர் மாவட்ட ஆட்சியர், மக்கள் அச்சமின்றி இருக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். நான்டெட்டில் உள்ள மராத்வாடா பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் ஹசோரி கிராமத்துக்கு ஆய்வு நடத்த சென்றுள்ளனர்.