மாணவியின் அந்தரங்க வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்ட 3 இளைஞர்கள் கைது

17 வயது பாடசாலை மாணவியின் அந்தரங்க விடயங்கள் அடங்கிய வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட  சந்தேக நபர்கள் மூவரும் 20, 23 மற்றும் 24 வயதுடைய நபர்கள் என மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாணவி தனது காதலனுக்கு அனுப்பிய காணொளியை (Vedio) காதலன் தனது நண்பர்களுடன் பகிர்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் குறித்த நண்பர்கள் சமூக ஊடகங்களில் மாணவியின் அந்தரங்க வீடியோவை வெளியிட்டுள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களும் மொனராகலை பண்டாரவாடிய, பட்டியாலந்த மற்றும் மகந்தனமுல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.