குஜராத்தில் ரூ350 கோடி ஹெராயின் பறிமுதல்

அகமதாபாத்: குஜராத் கடற்பகுதியில் கடலோர காவல்படையினரும், தீவிரவாத தடுப்பு படையினரும் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை பார்த்ததும், படகை வேகமாக ஓட்டினர். போலீசார் விரட்டி சென்று படகை மடக்கி பிடித்து, சோதனையிட்டதில் 5 மூட்டைகளில் 50 கிலோ ஹெராயின் இருந்தது.

விசாரணையில், இந்த படகு பாகிஸ்தானை சேர்ந்தது என தெரிய வந்தது. கைப்பற்றப்பட்ட ஹெராயினின் சர்வதேச மதிப்பு ரூ.350 கோடி. படகில் இருந்த 6 பேரும் கைது செய்யப்பட்டு ஜகாவ் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.