
நவம்பரில் வெளியாகும் சந்தானத்தின் ஏஜென்ட் கண்ணாயிரம்!
சந்தானத்தின் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக பட குழு அறிவித்துள்ளது. அதோடு இந்த படத்தின் இரண்டு நிமிட மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில் சந்தானம் நடித்துள்ள ஆக்சன், காமெடி, மற்றும் குதிரையில் ஏரி அமர்ந்து அவர் செல்லும் காட்சிகள் என இடம்பெற்றுள்ளன.
இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன் நடிக்க முனீஸ்காந்த், புகழ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். மனோஜ் பிதா இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஏஜென்ட் கண்ணாயிரம் படம் நவம்பரில் திரைக்கு வர இருப்பதாக அந்த மேக்கிங் வீடியோவில் தெரிவித்துள்ளார்கள். இந்த படத்தை தொடர்ந்து தற்போது பிரசாந்த் ராஜ் என்பவர் இயக்கும் கிக் என்ற படத்தில் சந்தானம் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.