15 சதவீத கமிஷன்… திண்டாடும் குமரி வளர்ச்சி பணிகள்.. அமைச்சர் மீது ஷாக் புகார்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று முன்னாள் மத்திய அமைச்சரும் பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் அவர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் செயல்பட முடியாத அளவிற்கு ஆளும் கட்சியினரால் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கலவர சூழ்நிலை ஏற்படுவதற்கு மாவட்ட ஆட்சியாளர் காரணம் ஆகிவிடக் கூடாது எனவும் கூறினார்.

மேலும் மாவட்டத்தில் எந்த ஒரு சிறிய பிரச்சினை ஆனாலும் அமைச்சர் அலுவலகத்தில் இருந்து அழுத்தம் வருவதாக அதிகாரிகள் தெரிவிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். அமைச்சர் தரப்பிலிருந்து ஏன் இந்த அழுத்தம் கொடுக்கிறார்கள் என்பதை தமிழக முதலமைச்சர் கண்காணிக்க வேண்டும். அமைச்சர் மனோ தங்கராஜ் அவர் சார்ந்திருக்கும் கட்சிக்கும், அவர் சார்ந்த அரசுக்கும் அவரை தேர்ந்தெடுத்த மக்களுக்கும் உண்மையாக இருக்க வேண்டும் ஆனால் அவரது செயலில் தெரியவில்லை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 51 பேரூராட்சிகளுக்கும் மத்திய அரசிடம் இருந்து வளர்ச்சி பணிக்காக 52 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 15 சதவிகிதம் அமைச்சர் அலுவலகத்திற்கு ஒதுக்க எழுதப்படாத ஆணை பிறப்பித்துள்ளார். இதைவிட தலைக்குனிவு எதுவும் இல்லை,. யானை பிச்சை எடுக்கக் கூடாது. அந்த யானையை துரத்த வேண்டும்.

ஒரு அமைச்சர் அமைச்சரின் அலுவலகம் பஞ்சாயத்து தலைவரிடம் 15 சதவிகிதம் தா என்று கூறுவது அரசிற்கு இதைவிட கேவலம் எதுவும் இல்லை. இந்த செயல்களை தமிழக முதலமைச்சரின் நேரடி பார்வைக்கு எடுத்துச் செல்லும் விதமாக சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர். காந்தி தலைமையில் முதலமைச்சரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம்.

15 சதவீதம் கேட்பது அடித்தளம் அதற்கு மேல் இன்னும் அதிகமாக
கமிஷன்
சென்றால் பணிகள் எப்படி நடக்கும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். தேங்காய்பட்டணம் துறைமுகத்திற்கு மத்திய அரசின் நிதி கோடிக்கணக்கில் கொடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்கரை சாலை தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரி வரை 2,600 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதனை மாநில அரசாங்கம் கேட்டு வாங்கியது. பணம் மத்திய அரசினுடையது வாங்குவது தப்பில்லை வேலை முடியும் பொழுது அதன் தரம் எப்படி இருக்க வேண்டும் என்பதை பார்க்க வேண்டும் என கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.