திருவனந்தபுரம்: கேரளத்தில் தமிழக பெண் உள்பட 2 பெண்களை ஏமாற்றி நரபலி கொடுக்கப்பட்டது தொடர்பாக ஏஜென்ட் உட்பட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறது. கொச்சியில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்து வந்த தருமபுரியை சேர்ந்த பத்மா என்பவரை ஏமாற்றி அழைத்து சென்று நரபலி கொடுத்தது அம்பலமாகியுள்ளது. பணக்காரர்கள் ஆக வேண்டும் என்பதற்காக லைலா மற்றும் பகவந்த் சிங் தம்பதி 2 பெண்களை கடத்தி சென்று நரபலி கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
