“இனி நல்ல படங்களில் நடிப்பேன் என்று உறுதியளிக்கிறேன்" – விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான லைகர் (Liger) திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை. அதுமட்டுமன்றி, படத்தில் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு சரியில்லை என்று பல்வேறு விமர்சனங்கள் வந்தன. இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற ‘SIIMA 2022’ விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு ‘Youth icon of South Indian cinema (male)’ விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிய விஜய் தேவரகொண்டா, லைகர் படத்தின் தோல்வி குறித்தும், தான் இனி நல்ல படங்களில் நடிப்பேன் என்றும் கூறியிருந்தார்.

விஜய் தேவரகொண்டா

இது பற்றி SIIMA விருது வழங்கும் விழாவில் பேசியிருந்த அவர், “நம் எல்லோருடைய வாழ்விலும் நல்ல நாள்களும் உண்டு, கெட்ட நாள்களும் உண்டு. அதேபோல் மிகவும் மோசமான நாள்களையும் நம் வாழ்வில் நாம் சந்தித்திருப்போம். அதை நாம் எப்படி எடுத்துக்கொண்டு அதிலிருந்து மீண்டு வருகிறோம் என்பது முக்கியம். உண்மையில் நான் இந்த விருதைப் பெறுவதற்காக இங்கு வரவில்லை. இனி எனது வேலையைச் சிறப்பாகச் செய்வேன். உங்களுக்குப் பிடிக்கும் வகையில் நல்ல படங்களில் நடிப்பேன், நிச்சயம் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என்பதைச் சொல்லத்தான் இங்கு வந்தேன்” என்று கூறினார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.